ஜப்பானில் ரத்து செய்யப்பட்ட 25 ரயில்கள்... ஒற்றை நத்தை செய்த `சம்பவம்'

ஜப்பானில் ரத்து செய்யப்பட்ட 25 ரயில்கள்... ஒற்றை நத்தை செய்த `சம்பவம்'

ஜப்பானில் ஓடும் ரயில்கள் நேரம் தவறாமைக்கு உலக உளவில் பெயர் பெற்றவை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். உழைப்பை நேசிக்கும் ஜப்பானியர்களைத் தினமும் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையை அவை செய்துகொண்டிருக்கின்றன. ஜப்பானில் ஓடுவதில் பெரும்பாலானவை புல்லட் ரயில்கள்தான். நிலநடுக்கம் போன்ற தீவிரமான இயற்கை சீற்றங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் இவை சரியாக இயங்கிக்கொண்டிக்கும். ஆனால், கடந்த மாதம் 30-ம் தேதி தெற்கு ஜப்பானில் 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் 12,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாயினர்.
அந்த நிலைமைக்கு ஒரு நத்தைதான் காரணமாக இருந்திருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அன்றைய தினம்  இரண்டு தடங்களில் மின்சாரம் தடைப்பட்டதால் JR Kyushu நிறுவனம் ரயில் சேவையை ரத்துசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அனைத்து ரயில்களும் திட்டமிட்ட நேரத்தின்படி இயங்குபவை என்பதால், 25 ரயில்களுக்கு மேல் ரத்துசெய்யப்பட்டன. நிலைமை சரி செய்யப்பட்டு ஒருவாரத்துக்குப் பின்னர் ரயில் பாதையின் அருகே இருக்கும் எலெக்ட்ரானிக் கருவி ஒன்றில் நத்தை சிக்கியிருப்பது தெரியவந்தது. ``நாங்கள் மின்சாரம் தடைப்பட்டதற்கான காரணத்தை ஆராயத் தொடங்கினோம். முதலில் அது கருவியில் ஏற்பட்ட பாதிப்பு என்றே நினைத்தோம் ஆனால், அதற்குப் பின்னர் நத்தைதான் காரணம் என்று தெரியவந்தது" என ரயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். கருவியில் சிக்கிய நத்தை மின்சாரம் பாய்ந்ததால் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.. இதுபோன்ற நிகழ்வு அரிதானது என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
நத்தை ரயில்

Comments

Popular posts from this blog

Russia Launches Spektr-RG

National Centre for Good Governance (NCGG)

POCSO Act