900 ஆண்டுகள் பழைமைவாய்ந்த செஸ் நாணயம்.. 1.3 மில்லியன் டாலருக்கு ஏலம்!

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான Sotheby's, இந்த செஸ் நாணயத்தை 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Lewis Chessman Coin

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆன்ட்டிக் பொருள் வியாபாரியின் அலமாரியில், 900 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இடைக்கால செஸ் நாணயம் ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனிலுள்ள அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான Sotheby's, இந்த செஸ் நாணயத்தை 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
1964-ம் ஆண்டு, இந்த `வைக்கிங்' சகாப்தத்தின் மிகப் பெரிய கலைப்பொருள்களுள் ஒன்றான லூயிஸ் செஸ்மென் நாணயம் (Lewis Chessmen piece), ஐந்து பவுண்டிற்கு வாங்கப்பட்டிருக்கிறது. `லூயிஸ் செஸ்மென்' என்பது 93 நார்ஸ் (Norse - வடக்கு ஜெர்மானியர்கள்) போர் வீரர்களின் வடிவத்திலான நாணயங்களின் சேகரிப்பு. இவற்றில் பெரும்பாலான நாணயங்கள், 12-ம் நூற்றாண்டின் வால்ரஸ் தந்தங்களால் செதுக்கப்பட்டவை.

900 ஆண்டுகள் பழைமைவாய்ந்த செஸ் நாணயம்.. 1.3 மில்லியன் டாலருக்கு ஏலம்!

பல நூறு வருடங்களுக்குப் பிறகு, 1831-ம் ஆண்டு, ஸ்காட்லாந்தின் Isle of Lewis பகுதியின் மணல் மேட்டில் இந்தக் கோர்வை நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. பிறகு அவற்றை, லண்டனிலுள்ள `பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும்', எடின்பர்க்கிலுள்ள `ஸ்காட்லாந்து தேசிய அருங்காட்சியகத்திலும்' பிரித்து வைக்கப்பட்டன. எனினும் 93 நாணயங்களில், ஐந்து நாணயங்கள் கண்டுபிடிக்கமுடியாமல் போனது. தற்போது கிடைத்துள்ள நாணயம் 8.8 செ.மீ உயரமுடையது.
இதன் மதிப்புத் தெரியாமலேயே, சுமார் 55 ஆண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாய் ஓர் ஆன்ட்டிக் வியாபார குடும்பத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டுப் பத்திரிகையாளரோடு பேசிய அக்குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர், ``என் தாத்தா எடின்பர்கைச் சேர்ந்த ஆன்ட்டிக் வியாபாரி. அவர் 1964-ம் ஆண்டு, இந்த ஐவரி செஸ்மென் நாணயத்தை வேறொரு ஆன்ட்டிக் வியாபாரியிடமிருந்து வாங்கியிருக்கிறார். இதை அவருடைய கொள்முதல் லெட்ஜரில், `பழங்கால வால்ரஸ் டஸ்க் வாரியர் செஸ்மேன்' வாங்கியதாகப் பட்டியலிட்டிருக்கிறார். பிறகு எங்கள் வீட்டிலுள்ள அலமாரியில் இத்தனை ஆண்டுகளாக இருந்தது" என்று கூறினார்.

900 ஆண்டுகள் பழைமைவாய்ந்த செஸ் நாணயம்.. 1.3 மில்லியன் டாலருக்கு ஏலம்!

'55 ஆண்டுகள் பழைமைவாய்ந்த செஸ் நாணயம் என்றுகூறி விற்கச் சென்ற எடின்பர்க் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது' என்று மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்துள்ளனர். மேலும், இந்த நாணயத்தை வாங்கிய Sotheby's நிறுவனத்தின் முதன்மை நிபுணரான அலெக்ஸ்சாண்டர் காதர், `` இந்தக் கண்டுபிடிப்பு என் பணி வாழ்க்கையில் நான் பார்த்த தனிப்பட்ட கண்டுபிடிப்புகளில் மிகச் சுவாரஸ்யமான ஒன்று" என்று அந்நாட்டு செய்தியாளர்களிடம் கூறி பூரித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Russia Launches Spektr-RG

Pink coaches introduced for women by the Northeast Frontier Railway zone

Union Budget 2019-20: Bucks for the banks